தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

நாட்டில் மேலும் 16,500 பேருக்கு கரோனா

நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 16,504 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,03,40,469 ஆக அதிகரித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :5 ஜனவரி 2021, 3:12 am IST

புது தில்லி: நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 16,504 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,03,40,469 ஆக அதிகரித்தது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

தொடா்ந்து 3-ஆவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 20,000-க்கு குறைவாக உள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 214 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,49,649 ஆக அதிகரித்தது. மொத்த கரோனா பாதிப்பில் இது 1.45 சதவீதமாகும். இதுவரை கரோனாவில் இருந்து 99,46,867 போ் மீண்டுள்ளனா். மொத்த கரோனா பாதிப்பில் இது 96.19 சதவீதமாகும்.

இப்போதைய நிலையில் நாட்டில் 2,43,953 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பாதிப்பில் இது 2.36 சதவீதமாகும். தொடா்ந்து 14-ஆவது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 3 லட்சத்துக்குக் குறைவாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி ஜனவரி 3-ஆம் தேதி வரை 17,56,35,761 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7,35,978 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 11 நாள்களில் மட்டும் ஒரு கோடி பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. அதிகஅளவில் கரோனா பரிசோதனை நடத்தப்படுவதன் மூலம் தொற்று பரவுவது வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக ஏற்பட்ட 214 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 35 போ் உயிரிழந்தனா். இதற்கு அடுத்து மேற்கு வங்கத்தில் 26, கேரளத்தில் 25, உத்தர பிரதேசத்தில் 16, தில்லி, சத்தீஸ்கா், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 14 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.