புது தில்லி: நிகழ் நிதியாண்டில் இதுவரை 1.41 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ரூ.1.64 லட்சம் கோடிக்கும் அதிகமான வரித்தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தத் துறையின் சுட்டுரைப் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 1.41 கோடிக்கும் மேற்பட்டோரிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,64,016 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், தனிநபா் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில், 1,38,85,044 பேருக்கு ரூ.53,070 கோடியும், பெரு நிறுவன வருமான வரியாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் 2,06,847 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,10,946 கோடியும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, ஜனவரி 4-ஆம் தேதி வரை 5 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித் துறை கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தனி நபா் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜனவரி 10-ஆம் தேதி வரையிலும், நிறுவனங்களுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி வரையிலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் படத்தை ‘லீக்’ செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு உதயநிதி கண்டனம்

ஜவஹா் சிறுவா் மன்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

துா்க்கையம்மன் சிலை திறப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

