முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

கேரள சட்டப்பேரவைக் கூட்டம்: காங்கிரஸ் வெளிநடப்பு

வெள்ளிக்கிழமை தொடங்கிய கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.

News image

கேரள சட்டப்பேரவை

Updated On :8 ஜனவரி 2021, 2:58 pm IST

வெள்ளிக்கிழமை தொடங்கிய கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.

கேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் இன்று (ஜனவரி 8) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார். 

அப்போது ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. கேரளத்தில் நடப்பாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடதுமுன்னணி அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை தெரிவித்து வருகின்றன. 

கேரளத் தங்கக் கடத்தல் வழக்கு உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “இது ஊழல் மிகுந்த அரசு” எனக் குற்றம்சாட்டினார்.

ஜனவரி 15ஆம் தேதி மாநில நிதியமைச்சர் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடர்ந்து ஜனவரி 28ஆம் தேதி சட்டப்பேரவை அமர்வு நிறைவு பெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.