சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

அறிமுகமாகும் முன்பே சாம்சங் கேலக்ஸி எஸ்21 விலைகள் கசிந்தன

ஜனவரி 14-ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா வகை செல்லிடப்பேசிகள் ஜனவரி 14-ம் தேதி அறிமுகமாக உள்ளது.

News image

அறிமுகமாகும் முன்பே சாம்சங் கேலக்ஸி எஸ்21 விலைகள் கசிந்தன

Updated On :9 ஜனவரி 2021, 3:06 pm IST


புது தில்லி: ஜனவரி 14-ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா வகை செல்லிடப்பேசிகள் ஜனவரி 14-ம் தேதி அறிமுகமாக உள்ளது. ஆனால், அதற்கு முன்பே தென்கொரிய சந்தைகளில் அதன் விலைகள் தெரிய வந்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈடி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், கேலக்ஸி எஸ்21 விலை டாலர் 916 (இந்திய ரூபாயில் ரூ.67,000)ஆகவும், கேலக்ஸி எஸ்21 பிளஸ் டாலர் 1,025 (இந்திய ரூபாயில் சுமார் 75,000) ஆகவும் இருக்கிறது.

கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா செல்லிடப்பேசியின் விலை டாலர் 1,329 (இந்திய ரூபாயில் 97000) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு வெளியான கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்20+ ஆகியவை மிக அதிக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸியில் வெளிவரவுள்ள கேலக்ஸி எஸ் 21 மற்றும்   கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஆகிய வகை செல்போன்களை விட கூடுதல் கேமரா வசதியையும், வெளிப்புறத் தோற்றத்தையும் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா கொண்டுள்ளது.

கேலக்ஸி எஸ் 21 6.2 அங்குல திரையும்,  கேலக்ஸி எஸ் 21 பிளஸில் 6.7 அங்குல திரையும்,  கேலக்ஸி எஸ் 21 அல்ட்ராவில் 6.8 அங்குல திரையும் உள்ளது.

கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போனில் முன்புறத்தில் 10எம்பி கேமராவும், பின்புறத்தில் 10 மடங்கு ஜூமிங் வசதியுடன் 108எம்பி மெயின் கேமராவும், 12எம்பி அல்ட்ரா வைட் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.