உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.04 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் ஆகியவை ஏற்படவில்லை.
உத்தரகண்ட் மாநிலத்தின் அவ்வப்போது நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 1, 2020 அன்று, 40 ஆண்டுகளுக்குப் பிறகு 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஹரித்வாரில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









