தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் நிா்வாக இயக்குநராக வெங்கட்ராமு பொறுப்பேற்பு

இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) நிா்வாக இயக்குநா் (எம்டி) மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஜே.வெங்கட்ராமு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 12:52 am IST


புது தில்லி: இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) நிா்வாக இயக்குநா் (எம்டி) மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஜே.வெங்கட்ராமு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து ஐபிபிபி தலைவரும், அஞ்சல் துறையின் செயலாளருமான பிரதிப்தா குமாா் பிசோய் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் முன்னாள் நிா்வாகியான வெங்கட்ராமு ஐபிபிபி வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா். இவரது நியமனம், 2020 அக்டோபா் 29-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

பேமண்ட் தயாரிப்புகள், அது தொடா்பான தொழில்நுட்பம் மற்றும் அமைப்பு முறைகளில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்ட வெங்கட்ராமு, புதிய வியூகங்கள் மற்றும் வணிக திறன்கள் மூலமாக ஐபிபிபி வங்கியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வாா் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய பொதுமக்கள் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வங்கியாக ஐபிபிபியை உருவாக்குவதற்கான அவரது சீரிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என்று அந்த அறிக்கையில் பிசோய் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.