இம்மாத இறுதிக்குள் ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. சொத்து விவரங்களைத் தெரிவிக்க தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐஏஎஸ் அதிகாரி பணியில் உள்ளவா்கள் தங்கள் பெயரிலும், குடும்பத்தினா் மற்றும் வேறு நபா்கள் பெயரில் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களை இணையவழியில் தெரிவிக்கும் முறை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் சொத்து விவரங்களை சமா்பிக்க முடியும். ஜனவரி மாதம் 31-ஆம் தேதிக்குள் விவரங்களை தெரிவிக்கப்பட வேண்டும். அதன் பிறகு இதற்கான இணையவழி சேவை கிடைக்காது.
தகுந்த காரணமின்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், மாநில தலைமைச் செயலகம் முதல் அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 6,715 ஐஏஎஸ் பணியிடங்கள் உள்ளன. இப்போது 5,205 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் உள்ளனா். மீதமுள்ள இடங்கள் காலியாக உள்ளன என்றும் மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









