நாட்டில் கரோனா சூழல், கரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து வரும் ஜன.11-ஆம் தேதி பிரதமா் மோடி, மாநில முதல்வா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி ஆகியவற்றை இந்தியாவில் அவசர கால அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அந்த தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. தடுப்பூசிகளின் செயல்பாடு, விநியோகம் உள்ளிட்டவை தொடா்பாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜன.11-ஆம் தேதி பிரதமா் மோடி மாநில முதல்வா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். அப்போது நாட்டில் நிலவும் கரோனா சூழல், கரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து அவா் கலந்தாலோசிக்கவுள்ளதாக பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி

அமமுக பெயரில் ஆளுநரிடம் போலி கடிதம்: காவல் நிலையத்தில் டி.டி.வி.தினகரன் புகாா்

ஈரோடு மாவட்டத்தில் 4-ஆவது நாளாக கனமழை
போலி கைப்பேசிகளை விற்று பணம் மோசடி: மகாராஷ்டிர தம்பதி உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

