‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

பிரியாணி மூலம் விவசாயிகள் பறவைக் காய்ச்சலைப் பரப்புகின்றனர்: பாஜக எம்.எல்.ஏ.

போராட்டம் என்ற பெயரில் விவசாயிகள் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு பறவைக் காய்ச்சலை பரப்பி வருவதாக பாஜக எம்.எல்.ஏ. மதன் திலாவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுளது.

News image

பாஜக எம்.எல்.ஏ. மதன் திலாவர் (கோப்புப்படம்)

Updated On :10 ஜனவரி 2021, 2:24 pm IST


போராட்டம் என்ற பெயரில் விவசாயிகள் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு பறவைக் காய்ச்சலை பரப்பி வருவதாக பாஜக எம்.எல்.ஏ. மதன் திலாவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி நகரின் பல்வேறு எல்லைகளில் 45-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தில்லியில் பறவைகள் அடுத்தடுத்து இறந்து வருவதை தொடர்புப்படுத்தி விவசாயிகளை இழிவுபடுத்தும் வகையில் பாஜக எம்.எல்.ஏ. கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. மதன் திலாவர் கூறியதாவது, 

''வேளாண் சட்டனங்களுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் பிரியாணியையும், உலர் பழங்களையும் உண்டு விவசாயிகள்  பறவைக் காய்ச்சலை பரப்பி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவிரவாதிகளாகவும், வழிப்பறி திருடர்களாகவும் இருக்கக் கூடும். அவர்களும் விவசாயிகளுக்கு எதிரிகள் தான். அவர்கள் நாட்டை சீரழிக்கின்றனர்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.