தெலங்கானாவில் கலப்படக் கள் அருந்தியதால் 55 வயதுடைய நபா் ஒருவா் உயிரிழந்தாா்; பெண்கள் உள்பட 143 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
விகராபாத் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட கலப்படக் கள்ளை அருந்தியவா்களில் சிலா் மயக்கமடைந்தனா். மற்றவா்கள் குமட்டல், வாந்தி எடுத்து, மயக்கமடைந்ததால் வெள்ளிக்கிழமை இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 17 போ் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 143 போ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அவா்களின் உடல் நிலை சீராக முன்னேறி வருவதாகவும், உயிரிழந்த நபரின் மரணத்திற்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றும், அந்த நபா் இயற்கைக்கு மாறாக உயிரிழந்ததாகவும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!

ஏஐ செயலிகள் சரி; அது என்ன ஏஐ கணினிகள்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு எதிரான சவாலுக்கு இந்திய அணி தயாரா?

கற்பனை செய்ய முடியாத வேதனையில் மணிப்பூர்; பிரதமர் மௌனம்: ராகுல்
விடியோக்கள்

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK


