/

‘விவசாயிகள் மரணத்திற்கு கவலைப்படாத மத்திய அரசு’: ராகுல்காந்தி

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளில் 60 பேர் இறந்தபோது வராதக் கவலை அவர்களின் டிராக்டர் பேரணியால் மத்திய அரசுக்கு வருகிறது என காங்கிரஸ் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image

ராகுல் காந்தி

Updated On :13 ஜனவரி 2021, 10:11 am

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளில் 60 பேர் இறந்தபோது வராதக் கவலை அவர்களின் டிராக்டர் பேரணியால் மத்திய அரசுக்கு வருகிறது என காங்கிரஸ் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான தில்லியில் நடந்து வரும் போராட்டமானது 50 நாள்களை நெருங்கி உள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, “ வேளாண் சட்ட போராட்டத்தில் 60 விவசாயிகள் உயிரிழந்தபோது மத்திய அரசுக்கு வராத கவலை அவர்களின் டிராக்டர் பேரணியால் வந்துள்ளது” என விமர்சித்துள்ளார். 

கடந்த ஜனவரி 7ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.