பிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் ஜெர்மனி அணியை ஈகுவடார் அணி வீழ்த்தியதைத் தொடர்ந்து ஈகுவடார் அதிபர் பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கிய 23-வது பிஃபா உலகக் கோப்பை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவில், உலகில் மிகவும் விலையுயர்ந்த இந்தக் கோப்பையை யார் வெல்லப் போகிறார்கள் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் தொடரில் கோப்பையை வெல்லும், முனைப்பில் அணிகள் மிகத்தீவிரமாக விளையாடி வருகின்றன.
இந்தத் தொடரின் ’இ’ பிரிவில் ஈக்வடார், ஜெர்மனி அணிகள் இடையிலான ஆட்டம் நியூ ஜெர்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ஈக்வடார் அணி 2-1 என்ற கணக்கில் வலிமைவாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது.
இதன் மூலம், 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஈக்வடார் அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை வீழ்த்திய ஈகுவடாரின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக ஒருநாள் பொது விடுமுறை அறிவித்து அதிபர் டேனியல் நோபோவா உத்தரவிட்டுள்ளார்.
Summary
Ecuador declared a national holiday after their dramatic 2-1 comeback win over Germany which sealed them a place in the FIFA World Cup knockout rounds for the first time in 20 years. President Daniel Noboa hailed the team's resilience in a difficult campaign.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






