சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

தங்கம் விலை அதிகரிப்பால் இரு மடங்கு உயர்வு... பிஃபா உலகக் கோப்பையின் விலை இவ்வளவா?

தங்கத்தின் விலை உயர்வால் பிஃபா உலகக் கோப்பையின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதைப் பற்றி...

News image

உலகக் கோப்பையுடன் ஆர்ஜென்டீன அணியினர்.

Updated On :25 ஜூன் 2026, 6:17 pm IST

தங்கத்தின் விலை உயர்வால் பிஃபா உலகக் கோப்பையின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கிய 23-வது பிஃபா உலகக் கோப்பை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவில், உலகில் மிகவும் விலையுயர்ந்த இந்தக் கோப்பையை யார் வெல்லப் போகிறார்கள் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தத் தொடரில் கோப்பையை வெல்லும், முனைப்பில் அணிகள் மிகத்தீவிரமாக விளையாடி வருகின்றன.

உலகக் கோப்பைத் தொடர் தீவிரமடைந்துள்ள நிலையில், 48 அணிகள் ஒரேயொரு கோப்பைக்காக கடுமையாக விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், உலகக் கோப்பையின் விலை குறித்த விவரங்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

4.93 கிலோ தூய தங்கத்தில், 6.175 கிலோ 18 கேரட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கோப்பையின் மதிப்பு, சர்வதேச போர்ப்பதற்றம், பங்குச்சந்தை வர்த்தகத்தின் ஏற்ற, இறக்கங்கள் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது.

1974 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டபோது கோப்பையின் விலை சுமார் 25,000 டாலர்களாக இருந்தது. கடைசியாக 2022 ஆம் ஆண்டில் ஆர்ஜென்டீன அணி கோப்பை வென்றபோது உலகக்கோப்பையில் விலை 2,77,000 டாலர்களாக இருந்தது. தற்போது நடப்பு தொடரில் இரண்டு மடங்கு தங்கத்தின் விலை அதிகரிப்பால், கோப்பையின் விலை அதிகரித்து 7,13,000 (இந்திய மதிப்பில் ரூ. 6.70 கோடி) டாலர்களாக உள்ளது.

ஒவ்வொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகும், வெற்றி பெற்ற அணிக்கு இந்தக் கோப்பை வழங்கப்படும். அதன்பிறகு ‘அசல் கோப்பை’ மீண்டும் பிஃபா அமைப்பிடம் திருப்பி வழங்கப்படும்.

அதன் பின்னர் அந்தக் கோப்பை சூரிச்சில் உள்ள ஃபிஃபா தலைமையகத்தில் வைக்கப்படுகிறது. வெற்றி பெற்ற அணிக்கு அதே வடிவில் இருக்கும் ஒரு பிரதிக் கோப்பை வழங்கப்படும்.

Summary

The FIFA World Cup trophy has surged over two-fold in value since the last tournament in 2022, with its gold content now worth approximately USD 713,000, according to data from financial markets provider LSEG.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.