ஒடிசாவில் அங்குல் மாவட்டத்தில் 25 வயது இளைஞர் அவரது உறவினர்களால் எரிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை ஹண்டபா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கடலிமுண்டா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் ராஜ் கிஷோர் பிரதான் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் அடிக்கடி மது அருந்தியதாகவும், குடிபோதையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், மோசமாக நடந்துகொள்வதை விரும்பாத உறவினர்கள் இளைஞரை மரத்தில் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
கிஷோர் பிரதானின் உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









