சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தெலங்கானாவில் இன்றைய கரோனா பாதிப்பு 249

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.91 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image

தில்லியில் மேலும் 340 பேருக்கு கரோனா

Updated On :16 ஜனவரி 2021, 11:39 am IST

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.91 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,91 லட்சமாக அதிகரித்துள்ளது.

புதிதாக ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,575-ஆக அதிகரித்துள்ளது.

நோய் பாதிக்கப்பட்ட 4,273 பேர் தற்போது மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளனர். 
மாநிலத்தில் மொத்தமாக குணமடைந்தோரின் அதிகரித்துள்ளது.  கரோனா இறப்பு விகிதம் 0.54 சதவிகிதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 97.99 சதவிகிதமாகவும் உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை ஒரேநாளில் மாநிலத்தில் 28,953 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.