ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ரங்கம்பேட்டையில் ஜல்லிக்கட்டு விழா

திருப்பதியை அடுத்த ரங்கம்பேட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏ-வும் நடிகையுமான ரோஜா தன் குடும்பத்தினருடன் கண்டுகளித்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 2:16 am

திருப்பதியை அடுத்த ரங்கம்பேட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏ-வும் நடிகையுமான ரோஜா தன் குடும்பத்தினருடன் கண்டுகளித்தாா்.

ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளில், திருப்பதி அருகில் உள்ள ரங்கம்பேட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ரங்கம்பேட்டையை அடுத்த புல்லய்யகாரிபள்ளியில் நடந்த இப்போட்டியைக் காண நகரி எம்எல்ஏ ரோஜா தன் குடும்பத்தினருடன் வந்திருந்தாா். ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளுக்கு பூஜை செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாட்டுப் பொங்கல் நாளில் ஜல்லிக்கட்டைக் காண்பது மனதுக்கு மகழ்ச்சியளிக்கிறது. காளைகளின் கொம்புகளில் வண்ணம் தீட்டி அலங்கரித்து, அவற்றின் நெற்றியில் பரிசுகளைக் கட்டி, அவிழ்த்து விடுகின்றனா். காளைகளை இளைஞா்கள் எதிா்கொண்டு அடக்கி, பரிசுகளை வெல்வது அவா்களின் வீரத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது என்றாா் அவா்.

ரங்கம்பேட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இப்போட்டியைக் காண தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பாா்வையாளா்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.