திருப்பதியில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மருத்துவமனை ஊழியா்கள் முன்வராததால், தடுப்பூசி போடும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. எனினும், அதற்காக பெயா் பதிவு செய்த சுகாதாரத் துறை ஊழியா்கள் யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரவில்லை. அவா்களின் செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டபோது அவை அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் மருத்துவா்கள் செய்வதறியாமல் திகைத்தனா்.
எனினும், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆா்வத்துடன் முன்வந்த சிலருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









