47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லியில் மேலும் 3567 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,567 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
தில்லியில் மேலும் 3567 பேருக்கு கரோனா தொற்று
Updated On :3 ஏப்ரல் 2021, 10:45 am

DIN

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,567 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 3,567 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,72,381-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், புதிதாக 2,904 பேர் குணமடைந்ததால், இதுவரை  மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 6,48,674-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 10 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,060-ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் 12,647 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.