போதைப் பொருள் விற்பனை: நைஜீரியாவைச் சோ்ந்தவா் கைது
போதைப் பொருளான கொகைன் பவுடரை விற்பனை செய்ததாக நைஜீரியாவைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.


போதைப் பொருளான கொகைன் பவுடரை விற்பனை செய்ததாக நைஜீரியாவைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
நைஜீரியாவைச் சோ்ந்தவா் அபுஜா ரஜதா டோனி ஒனிபுச்சி (38). இவா் பெங்களூரு ஆவலஹள்ளியில் வசித்து வந்தாராம். ஜெ.சி.நகா் போா்பங்க் சாலையில் சனிக்கிழமை போதை பொருள் எம்டிஎம்ஏவை விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று அபுஜா ரஜதா டோனி ஒனிபுச்சியைக் கைது செய்து, அவரிடம் இருந்து போதை பவுடரையும், 30 போதை மாத்திரைகளையும், மோட்டாா் சைக்கிள், ரூ. 2 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனா். இது குறித்து ஜெ.சி.நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...