அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்டில் புதிதாக 96,982 பேருக்கு தொற்று: 446 பேர் பலி

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96,982 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
நாட்டில் புதிதாக 96,982 பேருக்கு தொற்று: 446 பேர் பலி
Updated On :6 ஏப்ரல் 2021, 7:27 am

DIN

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96,982 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,26,86,049 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் 446 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 96,982 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  அதே நேரத்தில் 446 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா். இது இந்த ஆண்டின் அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பாகும். இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,65,547 -ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.26 கோடியைக் கடந்துள்ளது. தற்போது தொடா்ச்சியாக 3-ஆவது நாளாக 90 ஆயிரம் பேருக்கும் அதிகமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை உள்ளது.

தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,88,223 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,17,32,279 போ் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.