வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏப்.10 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கர்நாடக மாநிலத்தில் 8 இடங்களில் ஏப்.10 முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  

News image
கா்நாடக முதல்வா் எடியூரப்பா
Updated On :8 ஏப்ரல் 2021, 4:26 pm

DIN

கர்நாடக மாநிலத்தில் 8 இடங்களில் ஏப்.10 முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 
கா்நாடகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 6,570 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,40,130-ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,393 போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை மாநிலத்தில் 9,73,949 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 53,395 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 36 போ் இன்று பலியாகியுள்ளனா். இதுவரை மொத்தம் 12,767 போ் பலியாகியுள்ளனர். இதனிடையே கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் 8 இடங்களில் ஏப்.10 முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, உடுப்பி உள்பட 8 இடங்களில் ஏப்.10 முதல் 20ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதேசமயம் இரவு நேர ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.