சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

20 மருத்துவர்கள், 6 மாணவர்களுக்கு கரோனா: எய்ம்ஸ் தகவல்

நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 12:53 pm

நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் மகாராஷ்டிரம், ஒடிசா, ஜார்க்கண்ட், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

இதில் முன்களப் பணியாளர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் ஆறு மருத்துவ மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இந்த 6 மாணவர்களில் மூன்று பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.