சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

கரோனா பரவலுக்கு மத்தியில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

News image

பிரியங்கா காந்தி

Updated On :9 ஏப்ரல் 2021, 11:29 am

கரோனா பரவலுக்கு மத்தியில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும் மாணவர்களின் நலன் கருதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர், 'தற்போதைய சூழ்நிலையில் சிபிஎஸ்இ போன்ற கல்வி வாரியங்கள் மாணவர்களை தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது பொறுப்பற்றது. முடிந்தவரை தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும். ஒருவேளை தேர்வு நடைபெறும்பட்சத்தில் குறிப்பிட்ட சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடைபெற வேண்டும். 

ஏனெனில் கரோனா வேகமாகப் பரவும் இந்த சூழ்நிலையில் மாணவர்களின் நலன் மிகவும் முக்கியம். கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ​தேர்வுகளின் அழுத்தம் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். கல்வி முறையில் கடுமையைப் பின்பற்றாமல் மாணவர்களிடம் இரக்கம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். 

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே 4 முதல் ஜூன் 10 வரை தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.