தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மேற்குவங்கம்: கூச்பிகாரில் தேர்தல் ஒத்திவைப்பு

மேற்கு வங்கத்தின் கூச் பிகார் மாவட்டத்தில் வாக்குச் சாவடி அருகே நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image
மேற்குவங்கம்: கூச்பிகாரில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு
Updated On :10 ஏப்ரல் 2021, 8:13 am

DIN

மேற்கு வங்கத்தின் கூச் பிகார் மாவட்டத்தில் வாக்குச் சாவடி அருகே நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்களிக்க வந்த வாக்காளர்கள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி 125-இல் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. 

சிதல்குச்சி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதையடுத்து, சிறப்பு தேர்தல் அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.