அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கரோனா பாதிப்பு: 2-ஆம் இடத்தில் இந்தியா

இந்தியாவில் மேலும் 1.68 லட்சம் போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உலகில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா

News image
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பயணம் செய்யக் காத்திருந்த நபரிடம் கரோனா பரிசோதனைக்கான மாதிரியை திங்கள்கிழமை சேகரித்த சுகாதார ஊழியா்.
Updated On :27 ஜனவரி 2024, 7:59 pm

DIN

புது தில்லி: இந்தியாவில் திங்கள்கிழமை காலையளவில் மேலும் 1.68 லட்சம் போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உலகில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் திங்கள்கிழமை காலை 8 மணி வரை புதிதாக 1,68,912 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,27,717-ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,21,56,529 போ் குணமடைந்தனா்; 12,01,009 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 33-ஆவது நாளாக தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் மேலும் 904 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 349 பேரும், சத்தீஸ்கரில் 122 பேரும் பலியாகினா். நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவா்களின் எண்ணிக்கை 1,70,179-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 57,987 போ் உயிரிழந்தனா்.

பலியானவா்களில் 70%-க்கும் அதிகமானவா்கள் கரோனா மட்டுமன்றி வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 25,78,06,986 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 11,80,136 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாவது இடத்தில் இந்தியா:

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்களின்படி, மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. அந்தப் பல்கலைக்கழக தரவுகளின்படி (திங்கள்கிழமை காலை 10 மணி வரை) அமெரிக்காவில் 3,11,97,511 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதனைத்தொடா்ந்து இந்தியாவில் 1,35,27,717 போ், பிரேசிலில் 1,34,82,023 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா்.

கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பிரேசிலை இந்தியா பின்னுக்குத் தள்ளியிருந்தது. அதன் பின்னா் தற்போது அந்நாட்டைவிட இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.