இந்தியாவில் புதிதாக 1,68,912 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று ஒரே நாளில் 1,68,912 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,21,56,529 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும், 904 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,70,179 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1,21,56,529 போ் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 75,086 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தபோதைய நிலவரப்படி 12,01,009 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
அதேசமயம் இதுவரை 10,45,28,565 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தகவல்படி, நேற்று மட்டும் 11,80,136 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை, மொத்தம் 25,78,06,986 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே கரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: இபிஎஸுக்கு சேகர்பாபு எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


