சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மும்பையில் கரோனாவுக்கு காவல்துறை அதிகாரி பலி

மும்பையில் கரோனாவுக்கு 54 வயதுடைய காவல்துறை அதிகாரி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

News image
Updated On :12 ஏப்ரல் 2021, 7:06 am

மும்பையில் கரோனாவுக்கு 54 வயதுடைய காவல்துறை அதிகாரி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலில் 2ஆவது அலை வேகமெடுத்து வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 
மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 63,294 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 349 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அங்கு 5,65,587 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். மும்பையில் கரோனாவுக்கு 54 வயதுடைய காவல்துறை அதிகாரி பலியானார். 
இந்த நிலையில் மும்பையில் வகோலா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி கரோனாவுக்கு பலியாகியுள்ளார். கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர் பிகேசி ஜம்போ கரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். 
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மும்பையை பொறுத்தவரையில் இதுவரை 101 காவல்துறையினர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.