ரஷ்யாவின் ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் ஏற்கெனவே கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், அவசர காலத் தேவைக்காக ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசிக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக வல்லுநர் குழு இன்று கூடி ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியானது 28 நாள்கள் இடைவெளியில் இரு தவணைகளாக மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று புணேவிலுள்ள சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் இரு தவணைகளாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: இபிஎஸுக்கு சேகர்பாபு எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


