தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லியில் வென்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை: சுகாதாரத் துறை

தில்லி மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :14 ஏப்ரல் 2021, 11:18 am

DIN

தில்லி மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பேசியதாவது,

''தில்லி மருத்துவமனைகளில் 13 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. தில்லி மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை வென்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்படவில்லை.

மத்திய அரசு 1,100 படுக்கைகளை ஒதுக்கியுள்ளது. மேலும் ஒதுக்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறைவதாகத் தெரியவில்லை. 

அவசியமிருந்தால் மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு குறித்து அரசு செயலியில் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு படுக்கைகள் இருப்பு உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதியாக வேண்டும்'' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.