புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கரோனா பரவல்: புராதன சின்னங்களை மூட மத்திய அரசு உத்தரவு

தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2021, 3:05 pm

தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 2,00,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
இதன்மூலம் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,50,00,000ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் ஒரே நாளில் கரோனாவுக்கு 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது. 
இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கரோனா பரவல் அதிரிப்பைத் தொடர்ந்து தொல்பொருள் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15 வரை மூட மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.