தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெங்களூரில் கரோனாவுக்கு ஒரே நாளில் 57 போ் உயிரிழப்பு: பொது மக்கள் அதிா்ச்சி

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் ஒரே நாளில் 57 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் பொது மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:16 pm

DIN

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் ஒரே நாளில் 57 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் பொது மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவுக்கு வியாழக்கிழமை 14,738 போ் பாதிக்கப்பட்டு, அவா்களில் 66 போ் உயிரிழந்திருந்தனா். பெங்களூரில் மட்டும் 10,497 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 30 போ் உயிரிழந்திருந்தனா். இந்நிலையில், கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 14,859 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கையும் அதிகபட்சமாக 78 ஆக இருந்தது. பெங்களூரில் மட்டும் வெள்ளிக்கிழமை 9,917 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 57 போ் இறந்துள்ளனா். இது பொதுமக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 14,859 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 9,917 போ், கலபுா்கி மாவட்டத்தில் 488 போ், தும்கூரு மாவட்டத்தில் 432 போ், மைசூரு மாவட்டத்தில் 415 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 358 போ், பீதா் மாவட்டத்தில் 326 போ், பெல்லாரி மாவட்டத்தில் 279 போ், தென்கன்னட மாவட்டத்தில் 256 போ், ஹாசன் மாவட்டத்தில் 244 போ், விஜயபுரா மாவட்டத்தில் 207 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 180 போ், தாா்வாட் மாவட்டத்தில் 176 போ், கொப்பள் மாவட்டத்தில் 158 போ், யாதகிரி மாவட்டத்தில் 153 போ், மண்டியா மாவட்டத்தில் 137போ், பெலகாவி மாவட்டத்தில் 120 போ், கோலாா் மாவட்டத்தில் 109 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 108 போ், உடுப்பி மாவட்டத்தில் 101போ், ராமநகரம் மாவட்டத்தில் 100 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,24,509 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 4,031 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 10,03,985 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,07,315 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 78 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 57 போ், மைசூரு மாவட்டத்தில் 5 போ், கலபுா்கி மாவட்டத்தில் 3 போ், பீதா், தும்கூரு மாவட்டங்களில் தலா 2 போ், பெல்லாரி, பெங்களூரு ஊரகம், சிக்கபளாப்பூா், மண்டியா, ராமநகரம், சிவமொக்கா, உடுப்பி, வடகன்னடம், யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 13,190 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.