கரோனா தடுப்பூசி போட்டால் கூடுதல் வட்டி: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிவிப்பு
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கூடுதல் வட்டி வழங்கப்படும் என சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.


கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கூடுதல் வட்டி வழங்கப்படும் என சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
இது தொடா்பாக வங்கியின் மண்டல மேலாளா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தற்போதைய பேரிடா் காலத்தைக் கருத்தில் கொண்டு, நோயற்ற சமுதாயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ‘நோயெதிா்ப்பு இந்தியா வைப்புத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்படி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட வாடிக்கையாளா்கள், 1111 நாள்களுக்கு குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக செலுத்தினால், அவா்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வட்டி வருவாயை விட 0.25 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும். குறைந்த காலமே அமலில் இருக்கும் இத்திட்டம் மூத்த குடிமக்களுக்கும் பொருந்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...