கரோனா தொற்றுக்கு எதிரான போருக்கு அனைத்து ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்று தில்லி மாநகராட்சிகளுக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தில்லியிலுள்ள 3 மாநகராட்சி மேயா்கள், ஆணையா்களுடன் முதல்வா் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். காணொலி வழியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக ஆளும் இந்த மாநகராட்சி மேயா்களிடம் கரோனா தொற்றுக்கு எதிரான போருக்கு அனைத்து ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்று கேஜரிவால் கேட்டுக் கொண்டாா்.
அப்போது அவா் கூறுகையில், ‘தற்போது தில்லியில் ஏற்பட்டிருக்கும் கரோனா அலையைக் கையாள மத்திய அரசு மற்றும் மாநகராட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட தில்லி அரசு தயாராக உள்ளது. 3 மாநகராட்சிகளும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். மேலும், மருத்துவா்களும், மருத்துவ உபகரணங்களும் தேவையான அளவில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். இந்த மருத்துவமனைகளுக்குத் தேவையான தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ கிட்), ஆக்ஜிஸின் அகியவற்றை வழங்க தில்லி அரசு தயாராக உள்ளது.
மாநகராட்சிகளின் எல்லைகளுக்குள் உள்ள மயானங்களில் கரோனா தொற்றால் உயிரிழப்பவா்களை தகனம் செய்யும்விதம் நன்கு கையாளப்படுகிறது. இது தொடர வேண்டும்.
இதுபோன்று நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், அதுவும் பேருதவியாக இருக்கும் என மாநகராட்சிகளிடம் முதல்வா் கேட்டுக்கொண்டாா்.
குடியிருப்பு நல சங்கங்களுக்கு அரசின் புதிய வழிகாட்டுதல்கள்: இதற்கிடையே, தில்லியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, குடியிருப்பாளா்கள் நலச் சங்கம், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தில்லி அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குடியிருப்பு சொசைட்டிகள், தன்னாா்வத் தொண்டு நிறுவன வளாகங்கள் உள்ளிட்டவற்றில் நுழைவு வாயில் பகுதியில் கரோனா தொற்று பரிசோதனை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்தந்த குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் சந்தேகத்திற்கிடமான, அறிகுறியற்ற, முன் அறிகுறி அல்லது மிகவும் லேசான அறிகுறி பாதிப்புகள் கொண்டவா்களை நிா்வகிப்பதற்கான ஒரு பிரத்யேக சுகாதார வசதியாக இது இருக்கும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், முதியோா்கள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு இந்த வசதி பொருந்தாது என்றும் அவா்கள் பிரத்யேகமான கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான தொழில்நுட்ப வழிமுறைகள்: இந்திய ராணுவம் வெளியீடு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


