புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

வங்கதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. 

News image

வங்கதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

Updated On :19 ஏப்ரல் 2021, 11:37 am

கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. 

வங்க தேசத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வியாழக்கிழமை முதல் மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தலைமை தகவல் அதிகாரி சுரோத் குமார் தெரிவித்தார். 

கரோனா பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 9 நாள்களுக்கு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வங்கதேசம் முழுவதும் போக்குவரத்து ஆகியவற்றை ரத்து செய்தது. 

நிலைமை மோசமடைந்ததால் மேலும் ஊரடங்கு புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,462 பேருக்குத் தொற்றும், 102 இறப்பும் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 7,81,950 பேர் பாதிப்பும், 10,385 பலியும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.