யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

‘லாபம் என்பது கெட்ட சொல் அல்ல’: தடுப்பூசி உற்பத்தி குறித்து ஆனந்த் மஹிந்திரா கருத்து

தடுப்பூசி உற்பத்தி குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வரவேற்றுள்ளார்.

News image
ஆனந்த் மஹிந்திரா
Updated On :20 ஏப்ரல் 2021, 9:32 am

DIN

தடுப்பூசி உற்பத்தி குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வரவேற்றுள்ளார்.

நாட்டில் முக்கிய மருத்துவர்களுடனும், மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டதற்கு பிறகு தடுப்பூசி உற்பத்தி குறித்த புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி நாட்டில் உற்பத்தியாகும் மருந்துகளில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் மீதமுள்ள 50 சதவிகித தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுச்சந்தை விற்பனைக்கும் அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனை வரவேற்றுள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா “புதிய கொள்கையின்படி, தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியில் குறிப்பிட்ட பகுதியை திறந்த சந்தையில் முன்பே அறிவிக்கப்பட்ட விலையில் விற்க அனுமதிக்கிறது. லாபம் என்பது கெட்ட சொல் அல்ல. இது அதிக உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஊக்கமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.