மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராஜஸ்தானில் 5 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்

ராஜஸ்தானில் பிகானேர் மாவட்டத்தில் உள்ள நோகா சிறையில் 5 சிறைக் கைதிகள் தப்பியோடியுள்ளனர். 

News image

ராஜஸ்தானில் 5 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்

Updated On :21 ஏப்ரல் 2021, 8:01 am

ராஜஸ்தானில் பிகானேர் மாவட்டத்தில் உள்ள நோகா சிறையில் 5 சிறைக் கைதிகள் தப்பியோடியுள்ளனர். 

தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க பிகானேரில் இருந்து சுற்றியுள்ள மாவட்டங்களுக்கான சாலைகள் தடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தகவல்களின்படி, நோகா சிறையில் செவ்வாய்க்கிழமை 
அதிகாலை 2.30 மணியளவில் சிறைச்சாலையின் ஜன்னலை உடைத்து, போர்வையைப் பயன்படுத்தித் தப்பிச் சென்றுள்ளனர். 

இவர்களில் நான்கு கைதிகள் ஹனுமன்கர் மற்றும் ஒருவர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

அருகில் உள்ள அனைத்து காவல் நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாலோடி சிறையிலிருந்து ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 16 கைதிகள் சிறை ஊழியர்களின் ஒப்புதலுடன் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.