உ.பி.யில் இதுவரை ஒரு கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

உத்தரப் பிரதேசத்தில் கரோனா நோய்க்கான தடுப்பூசியைக் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. 
உ.பி.யில் இதுவரை ஒரு கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

உத்தரப் பிரதேசத்தில் கரோனா நோய்க்கான தடுப்பூசியைக் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. 

சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்பட 99,27,150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 60 வயதுக்குள்பட்டவர்களுக்கு தனியார் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. 

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், கரோனா சோதனை மற்றும் தடுப்பூசி ஆகியவை மாநிலத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பாதுகாப்பதற்காக, தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் உத்தரப் பிரதேசம் முழுவதும் 6,11,595 பேருக்கு போடப்பட்டுள்ளது. 

சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு முதல் தவணையாக 17,43,786 ஆகவும் இரண்டாவது தவணையாக 10,78,093 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், உ.பி.யில் இதுவரை 90 லட்சத்துக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com