கரோனாவுக்கு குடும்பத்தில் 3 பேரை இழந்த பெண் தற்கொலை
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த வாரம் கரோனாவுக்கு பலியான நிலையில், துக்கத்தில் இருந்த அப்பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார்.


மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த வாரம் கரோனாவுக்கு பலியான நிலையில், துக்கத்தில் இருந்த அப்பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருமே கரோனாவால் பலியாகினரா என்பது குறித்து காவல்துறை இன்னமும் உறுதி செய்யவில்லை.
இது குறித்து அவர்களது உறவினர்கள் கூறுகையில், பால்கிஷன் கார்கின் குடும்பத்தில் அவரது மனைவி சந்திரகலா (75), மூத்த மகன் சஞ்சய் (51), இளைய மகன் ஸ்வப்னீஷ் (48) ஆகியோர் அடுத்தடுத்து 5 நாள்களுக்குள் உயிரிழந்தனர்.
அடுத்தடுத்து 3 மரணங்கள் நேரிட்டதால் கடும் துக்கத்தில் இருந்த இளைய மருமுகள் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...