யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்; ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 13 நோயாளிகள் உயிரிழந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :23 ஏப்ரல் 2021, 4:24 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 13 நோயாளிகள் உயிரிழந்தனர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்த கரோனா நோயாளிகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மகாராஷ்டிர மருத்துவமனை தீ விபத்தில் நோயாளிகள் உயிரிழந்தது துயரமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.