புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

மேற்கு வங்க 7-ம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம்

மேற்கு வங்க மாநிலத்தில் ஏழாம் கட்ட தோ்தல் இன்று காலை தொடங்கியது. 9 மணி நிலரவப்படி 17.95% வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. 

News image

மேற்கு வங்க 7-ம் கட்ட வாக்குப்பதிவு

Updated On :26 ஏப்ரல் 2021, 6:08 am

மேற்கு வங்க மாநிலத்தில் ஏழாம் கட்ட தோ்தல் இன்று காலை தொடங்கியது. 9 மணி நிலரவப்படி 17.95% வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 7-வது கட்டமாக இன்று 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் மொத்தம் 284 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தோ்தலுக்காக 12,068 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 86,78,221 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர். இந்த தொகுதிகளில் மொத்தம் 284 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 12,068 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முதல்கட்ட தகவலின்படி, மாநிலத்தில் இதுவரை 17,95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 19.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

தனிநபர் தொகுதிகளைப் பொருத்தவரை, மால்டா மாவட்டத்தில் காசோல் அதிகபட்சமாக 20.56 சதவீத வாக்குப்பதிவும், மேற்கு பர்த்வானில் பாண்டவேஸ்வரில் 11 சதவீத வாக்குகளையும் பதிவு செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.