புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை: பிறந்து சில மணி நேரத்தில் இரட்டைக் குழந்தைகள் பலி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பராபங்கியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளது. 

News image

உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை: பிறந்த இரட்டைக் குழந்தைகள் பலி

Updated On :26 ஏப்ரல் 2021, 6:29 am

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பராபங்கியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளது. 

பராபங்கியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனால் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், பிறந்து சில மணி நேரத்தில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது. 

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகளும் நிர்வாக அதிகாரிகளும் எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆக்சிஜன் வழங்க மருத்துவ நிர்வாகம் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் வழங்க தங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருவதாக உ.பி. அரசும், சுகாதாரத் துறையும் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.