கரோனாவுக்குப் புதிய மருத்துவமனை: கேஜரிவால் நேரில் ஆய்வு
தில்லி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க கட்டப்பட்டு வரும் புதிய கரோனா சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆய்வு மேற்கொண்டார்.


தில்லி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க கட்டப்பட்டு வரும் புதிய கரோனா சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆய்வு மேற்கொண்டார்.
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடன் நேரில் வந்து கட்டுமானப் பணிகளை முதல்வர் பார்வையிட்டார்.
தலைநகரான தில்லியில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவிலும் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால், பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் தில்லி ஜிடிபி மருத்துவமனை அருகே கரோனா சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்பணிகளை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (ஏப்.27) ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் உடன் இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...