மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image

புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

Updated On :28 ஏப்ரல் 2021, 8:59 am

DIN

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவித்து வருகின்றது. 

அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கெனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்துள்ளது. 

மே 3-ஆம் தேதி வரை மதியம் 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.