தாணே தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் பலி

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
தாணே தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் பலி
தாணே தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் பலி
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கடந்த 5 நாள்களுக்கு முன்னதாக பால்கர் மாவட்டத்தில் விராரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இதையடுத்து இன்று இந்த தீ விபத்து சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. 

கௌசா-மும்ப்ரா பகுதியில் பிரைம் கிரிடிகேர் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோயாளிகள் யாரும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 

3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 20 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

தீ விபத்துக்கான காரணத்தை அறிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com