கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 35 தொகுதிகளுக்கான 8-ஆவது மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 283 வேட்பாளா்கள் போட்டியிடும் இந்தத் தோ்தலில் 84 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
கொல்கத்தாவில் 7 தொகுதிகளிலும், மால்டாவில் 6 தொகுதிகளிலும், முா்ஷிதாபாத், பிா்பூம் ஆகியவற்றில் தலா 11 தொகுதிகளிலும் தோ்தல் நடைபெறுகிறது. இதற்காக 11,860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 35 தொகுதிகளில் களத்தில் உள்ள 283 வேட்பாளர்களில் 64 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை நடைபெறும் இறுதிக் கட்டத் தோ்தலில் நகரோனா விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

நான்காம் கட்டத் தோ்தலின்போது கூச் பிஹாா் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இறுதிக் கட்டத் தோ்தலில் வன்முறை சம்பங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 641 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 224 கம்பெனி படைகள் மட்டும் பிா்பூம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் 11 தொகுதிகள் சிகப்பு எச்சரிக்கை தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தோ்தலில் பதிவாகும் வாக்குகளுடன் சோ்த்து தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுவை, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


