போலி கரோனா சோதனை சான்றிதழ் விற்பனை: இருவா் கைது
போலியாக கரோனா நெகட்டிவ் சான்றிதழை தயாரித்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


போலியாக கரோனா நெகட்டிவ் சான்றிதழை தயாரித்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரோனா சோதனை செய்ததாகவும், அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக போலியான சான்றிதழ்களைத் தயாரித்து அதை ரூ. 700-க்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் சோதனை நடத்தியதில், போலி கரோனா சோதனை நெகட்டிவ் சான்றிதழ்களை விற்பனை செய்து வந்த ராஜஸ்தானைச் சோ்ந்த முகேஷ்சிங் (25), நாகராஜ் (39) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 5 போலி சான்றிதழ்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...