47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிருஷ்ணா நீர் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு

கிருஷ்ணா நதி நீர் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா மறுப்பு தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :2 ஆகஸ்ட் 2021, 11:06 am

DIN

கிருஷ்ணா நதி நீர் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா மறுப்பு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா நதி நீரை பகிர்ந்து கொள்வதில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கிடையே சிக்கல் நிலவிவருகிறது. இதனிடையே, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தான் இரண்டு மாநிலங்களுக்கும் சொந்தமானவன் என்றும் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணும்படி இரண்டு மாநிலங்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சட்டப்பூர்வமாக இந்த வழக்கை விசாரிக்க எனக்கு விருப்பமில்லை. நான் இரண்டு மாநிலங்களுக்கும் சொந்தமானவன். பேச்சுவார்த்தையின் மூலம் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண முடிந்தால் அதனை தயவு செய்து செய்யுங்கள். எங்களால் உங்களுக்கு உதவி செய்ய முடியும். அப்படி இல்லையெனில், வேறு அமர்வுக்கு இவ்வழக்கை மாற்றுகிறேன்.

உங்களின் அரசுகளை சமாதானப்படுத்தி பிரச்னையை தீர்க்க பாருங்கள். இதில், தேவையில்லாமல் தலையிட நாங்கள் விரும்பவில்லை" என்றார்.

கிருஷ்ணா நதியிலிருந்து மின்சார தேவைக்காக தெலங்கானா பாரபட்சமின்றி நீரை எடுக்கிறது என்றும் இது 2015 ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் ஆந்திரப் பிரதேசம் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக உள்ள ஸ்ரீசைலம், நாகார்ஜுனா சாகர், புலிசிந்தலா ஆகிய அணைகளின் கட்டுப்பாட்டை ஜல்சக்தி துறை அமைச்சகம் எடுத்து கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் ஆந்திரா கோரிக்கை விடுத்திருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.