புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

தொடரும் அமளி: இரு அவைகளும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து இரு அவைகளும் இன்று பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

News image

மாநிலங்களவை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு

Updated On :3 ஆகஸ்ட் 2021, 7:23 am

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து இரு அவைகளும் இன்று பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கடந்த 10 நாள்களாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அவையின் மாண்பை குலைக்கும் விதமாக உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டாம் என்று இரு அவைத் தலைவர்களும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை கூடிய இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதையடுத்து பிற்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.