செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கடந்த வார மொத்த பாதிப்பில் கேரளத்திலிருந்து மட்டும் 51% பதிவு: மத்திய அரசு

கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் பதிவான மொத்த கரோனா பாதிப்பில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் கேரளத்தில் மட்டும் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஆகஸ்ட் 2021, 1:29 pm

DIN


கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் பதிவான மொத்த கரோனா பாதிப்பில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் கேரளத்தில் மட்டும் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தில்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அதிகாரிகள் தெரிவித்தது:

"கடந்த 2 வாரங்களாக கேரளத்தில் 11 மாவட்டங்கள், தமிழகத்தில் 7 மாவட்டங்கள் உள்பட 9 மாநிலங்களிலுள்ள 37 மாவட்டங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. 11 மாநிலங்களிலுள்ள 44 மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாராந்திர கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவிகிதத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது.

கடந்த 7 நாள்களில் பதிவான மொத்த கரோனா பாதிப்பில் 51.51 சதவிகிதம் கேரளத்தில் மட்டுமே பதிவாகியுள்ளது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.