தவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 7:15 am

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் ஜைனாபோராவின் க்ரால்செக் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை சார்பில் சாலை திறப்பு விழாவில் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

இதில், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக திங்கள்கிழமை, ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அடையாளம் தெரியாத நபரால் பாஜகவின் கிசான் மோர்ச்சா தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹிரா பானு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.